search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க கடற்கரை"

    அமெரிக்காவின் நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் கொடூரமான சுறா தாக்கியதில் வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #SharkAttack #SwimmerDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம், நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவரை கொடூரமான சுறா தாக்கியது. அவரது அலறல் கேட்டு அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



    அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்கு நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நீச்சல் வீரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 1936-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த மாகாணத்தில் ஒருவர் சுறா தாக்கி உயிரிழந்து இருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

    இருப்பினும் நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் கடந்த ஆகஸ்டு மாதம் 61 வயதான நரம்பியல் மருத்துவ நிபுணர் வில்லியம் லிட்டன் சுறா தாக்குதலுக்கு ஆளானார். கால்களில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×